என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயிற்சி முகாம்"
- விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
- சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ கத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடை பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் கூறுவதற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அம்மா அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.
மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்-அமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்தி சாலி மந்திரியிடம் இதை விடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
எனவே பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
- வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையலாம்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இலாபகரமான கறவைமாடு வளர்ப்பு என்ற தலைப்பில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் அமுதா ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- உச்சிப்புளி அருகே ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
- முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் கிராமத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயல லிதா மீன்வளப் பல்கலைக்க ழகத்தில் மீன்வளத்தொழில் காப்பகம், தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் ராமநாதபுரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம் குறித்த ஒரு வாரகால உள்வளாக பயிற்சியை தொடங்கியது.
அதற்கான தொடக்க விழா நேற்று அரியமான் கிராமத்தில் நடந்தது. விழா விற்கு மீன்வளத் தொழில் காப்பக இயக்குநர் முனை வர் நீதிச்செல்வன், தலைமை தாங்கினார். உத விப் பேராசிரியர் கலைய ரசன் வரவேற்றார். ராமநா தபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசு கையில், மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ராமேசுவரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறினார்.
பயிற்சியில் ராமேசுவரம் பகுதியை சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு திறன் மேம்பாட் டுக் கழகம், உதவி இயக்குநர் குமரவேல், உதவி இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கேப் டன் சகாயரெக்ஸ் இயக்கு னரக ஊழியர்களுடன் இணைந்து விழா ஏற் பாட்டை செய்தார். மாணவி கிருத்திகா நிகழ்ச்சியை தெகுத்து வழங்கினார். தானி யங்கி பொறியாளர் சிவ சுடலைமணி நன்றி கூறினார்.
- முகாமில் பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
- பயிற்சியில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமைதாங்கினார்.
தனியார் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த கார்த்திக் நாகப்பட்டினம் நகரம் மற்றும் வட்டாரத்தில் ஹோட்டல், இனிப்பகம் மற்றும் பேக்கரியில் பணிபுரிபவர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கினார்.
நாகப்பட்டினம் நகர ஹோட்டல், தேநீர் மற்றும் இனிபக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் இரா.முருகையன் மற்றும் நாகூர் நகர வர்த்தகர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உணவு தயாரிப்பின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துவது, தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பாது காப்பாக வைத்திருப்பது, பரிமாறுவது உட்பட அனைத்து உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னர் பங்கேற்பாளர்கள் சந்தேகங்க ளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் 80-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.
முடிவில் கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.
- மக்களுக்கு மின் விபத்து நேராமல் ஊழியர்கள் செயல்படவேண்டும்
- அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
திருவாரூர்:
திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறுகையில், பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் எர்த்ராடு கண்டிப்பாக பணியின்போது பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை இடற்பாட்டால் மின் கம்பி கள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து ஊழியர்கள் செயல்படவேண்டும். மழை நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் பிரிவு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் நடவடிக்கை
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குப்பட்ட நாய்க்கனூர் ஊராட்சியில் உள்ள கிராம பகுதிகளில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகருக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் மேலா திருப்பதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தேசிய உணவு திட்டத்தின் ஆலோசகர் வாசுதேவரெட்டி. ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவிதவள்ளி, வேளாண்மை அலுவவர் சோபனா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைத் தலைவர் தமிழ்செல்வி ஜோதிலிங்கம் ஆகியோர் நன்றி கூறினார்.
- வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.
- பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
பரமத்தி வேலூர்:
வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் செயல்படுவது குறித்து பயிற்சி அளித்தனர்.
இதற்கு முன்னதாக வேலூர் டவுன் பஞ்சாயத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணி புரிந்து வரும் செந்தில்குமார் (45), மற்றும் 8 ஆண்டுகளாக பணிபுரியும் குப்பாயி (45)ஆகிய இருவருக்கும் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
இந்த பயிற்சியில் பரமத்தி செயல் அலுவலர் சுப்பிரமணி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ், வெங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன்,எருமப்பட்டி செயல் அலுவலர் வசந்தா மற்றும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
- விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.
தேன்கனிக்கோட்டை,
\கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளி கிராமத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங் மற்றும் தேசிய லீன் ஆர்கனைசேஷன் ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி இணைந்து நடத்திய தேசிய வேளாண்மை சந்தைப்ப டுத்தல் பற்றி விவசாயிக ளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இந்த பயிற்சி முகாமில் கணேஷ் தலைமை வகித்தார், கோலட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா வரவேற்பு ரை ஆற்றினார். இருது கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் கலந்து கொண்டு முகாமை தொ டங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அறங்காவலர் முனி சங்க ரப்பா, விவசாயிகளுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியத்துவம் குறித்து பேசினார். பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஆன்லைன் சந்தைப்படுத்தல் குறித்த அனைத்து புள்ளிவி வரங்களையும் பெங்களூரு வில் உள்ள நியூ ஹொரைசன் பொறியியல் கல்லூரியின் பயிற்சியாளரும் பேராசிரி யருமான டாக்டர் ரோஸ் கவிதா விவசாயம் குறித்த பிரதம மந்திரியின் பல்வேறு திட்டங்களைப் குறித்து. மற்றும் டிஜிட்டல் மார்க் கெட்டிங்கிற்கான பல்வேறு பயன்பாடுகளை விளக்க மாக கூறினார் .
ஆற்றல் திறன் பயிற்சியா ளர் விஸ்வாஸ் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவசாயிகளுக்கு புரிய வைக்கும் ஒரு செயல் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சிகான ஏற்பாடு களை லீன் அமைப்பின் இயக்குனர் பிரதிபா செய்தி ருந்தார்.
முகாமில் 3 நாள் பயிற்சி கலந்து கொண்ட விவசாயி களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இணை இயக்குநர் ராஜேந்திரன் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு படைப்பாற்றல் சிந்தனைகள் வளர்த்தல், அன்றாட வாழ்வியலில் கணக்குகளின் பயன்பாடு, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களை அணுகி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முறை ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் புதிய இணைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் 61 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது.
- நவநீதன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கான பயிற்சிகளை அளித்தார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை தீர்மானிக்கும் செயல்முறைக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இதில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பங்கேற்றனர்.
முகாமில் பவானிசாகர் அரசு பயிற்ச்சி நிறுவன பயிற்ச்சியாளர் நவநீதன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கான பயிற்சிகளை அளித்தார்.
மொடக்குறி்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அலுவர்கள் பயிற்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் “கிராம அடிப்படை பயிற்சி” நடைபெற்றது.
- பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.
இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயி களை வரவேற்று பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் பர மத்தி வட்டார வேளாண்மை அலுவ லர், மோகனபிரியா, துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்து கூறினார்.
இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் கலந்துகொண்டு வேளாண் மானிய திட்டம் குறித்து கூறினார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் நளினி, வனஅலுவலர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் நிவேதா மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினார்.
- கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம் நடந்தது.
- முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றுவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கழிவுநீர் சேகரிப்பு, தொட்டிகளிலிருந்து கழிவுநீரை எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகள் பற்றி கழிவுநீர்ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல்அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இந்த முகாமில் நவீன முறையில் பாதுகாப்பாக கழிவுநீர்களை சுத்தம் செய்யும் முறை பற்றி தூய்மை இந்தியா திட்ட முதன்மை பயிற்றுநர் ராம்குமார், சுகாதாரபணிஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் பயிற்சியளித்தனர். மதுரை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரூராட்சி செயல்அலுவலர்கள், 18 சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்